Thursday , October 17 2019
Breaking News
Home / இ‌ந்‌திய‌ச் செய‌தி / கலைஞர் கருணாநிதி. இவரைப் போல் வாழ்ந்துவரும் இல்லை, இவருக்கு நிகர் உயர்ந்தோரும் இல்லை…
கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி. இவரைப் போல் வாழ்ந்துவரும் இல்லை, இவருக்கு நிகர் உயர்ந்தோரும் இல்லை…

பல வருடங்களாய் அவர் பதவியில் இல்லை… 94 வயதில் பேச்சிழந்து, உணர்வற்று போயிற்று. சக்கர நாற்காலியின் உதவியால் மட்டுமே நகர முடிகிறது. ஒவ்வொரு நாளும் இன்றாவது நல்ல செய்தி வந்துவிடாதா என்று ஒரு வக்ரக் கும்பல் காத்திருக்க, என்றும் கெட்ட செய்தி வந்து விடக் கூடாதே எனப் பரிதவிப்புடன் ஒரு பாசக் கூட்டம் அவருக்காய் பிரார்த்திக்கிறது.!

இவரின் மரணத்திற்காக காத்திருந்தவர்களில் பலர் எமனுக்கு இரையாகிப் போனதே இன்றுவரை வரலாறு.! அவர் காய்ச்சல், நோய்த் தொற்றென மருத்துவமனை போனாலே தமிழகம் கிடுகிடுக்கிறது. நலமடைந்து திரும்பினாலோ எதிரிகளுக்கு வேர்க்கிறது.

இந்த தள்ளாத வயோதிகத்திலும் எதிரிகளுக்கு இத்தனை திகிலை தருகிறார் என்றால் இளமையில், பதவியில், அதிகாரத்தில் இருந்த பொழுது எப்படிப்பட்ட ஆளுமையை காட்டியிருப்பார்..! அவரில்லாததாலேயே தமிழக அரசியல் அநாதையாகிப் போனது. அந்த தைரியத்திலேயே பல அரைவேக்காடுகள் தமிழக அரசியலுக்குள் கால் வைக்கத் துணிந்தார்கள்.!

இன்று… அவர் இறப்பு தள்ளிப் போடப்படவேண்டும் என்ற எண்ணத்தை அவரின் எதிரிகள் மனதிலும் கூட ஏற்பட வைத்ததே அவர் தமிழத்தின் அசைக்க முடியாத சக்தியாக இன்றும் இருப்பதின் ஆதாரம். இது போதும்.. ஏழேழு ஜென்மங்களுக்கான வெற்றி, புகழோடு ஒரு சக்ரவர்த்தியாய் வாழ்ந்துவிட்டார்.

இனி இந்த மண்ணை விட்டு அவர் உடல் மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் அவர் பெயரும், புகழும் என்றும் நிலைத்து நின்று அவரின் பெருமை பாடும்..!!

இந்திய அரசியலின் மையப்புள்ளி கலைஞர் கருணாநிதி.

கலைஞரை இவ்வாறு நினைவு கூறுவோம் ! .

நான்கு ஆண்டு கால மோடி ஆட்சியிலும் இரண்டு ஆண்டு கால எடப்பாடி ஆட்சியிலும் தமிழகத்தின் நிலையை ஒரு கணம் நினைத்த பின்பு கலைஞரின் இறுதி காலத்தை நினைவு கூறுவோம் .

கலைஞரின் உடல் நலம் குறித்து வரக்கூடிய தகவல்களும் அரசியல் ,தலைவர்களின் கருத்துக்களும், ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவும் கலைஞரின் இறுதி நிகழ்வை உணர்த்துகிறது .

அவர் மீது முரண்பட்ட கருத்த்துக்கள் உடைய அனைவரும் அவரது மறைவிற்கு பிறகு அவரது அரசியல் சாதனைகளையும், ,வேதனைகளை யும் பல பத்து ஆண்டுக ளுக்கு நினைவிற் கொள்ள நேரிடும். .

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக நன்மையா னாலும்,தீமையானாலும், புகழ்வதாகிலும் இகழ்வதாகிலும் அது கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லில் இருந்தே தொடங்கியது

இந்திய கூட்டமைப்பில் . தமிழ் மொழி ஆளுமை மிக்க மொழியாய் வலம் வந்ததும், வடவரால் தேய்ந்த ,தமிழகம்வளர்ச்சி பெற்றதும். வீழ்ந்த தமிழினம் எழுச்சியு ற்றதும் கலைஞர் என்ற ஒற்றை செல்லாலே ..

கடந்த நாற்பது ஆண்டுகளாக கலைஞர் போராடி பெற்றுத்தந்த உரிமைகளை , நடப்பு நான்கு ஆண்டுகால இந்துத்துவா ஆட்சியில் போராட முடியாமல் ஒன்றன் பின் ஒன்
றாக இழந்து வருகிறோம் ,

பெரியார்,அண்ணா,கலைஞர்,அவர்களின் திராவிடகொள்கையில் சிக்கி ,அதிலிருந்து இறுதி வரை மீளமுடியாமல் தவித்தவர்களில் எம் ஜி யாரும் , ஜெயலலிதாவும் முதன்மையா னவர்கள் என்றால் அவர்களின் ஆளுமைமிக்க கருத்தியல் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்திருக்க முடியும். .

அதெல்லாம் சரி. ஈழத்திற்க்கு கலைஞர் துரோகம் செய்தாரே? அதை எப்படி பொறுத்து கொள்ள முடியும்?

1980களில் ஈழப்போராட்டத்தை தமிழக அரசியலில் முன் நின்று நடத்தியது யார் என வரலாற்றினை புரட்டிப் பார்த்தால் அதில் கருணாநிதியும் ஒருவன் பங்ஙளிப்பபு செய்துள்ளான் என எழுதப்பட்டிருக்கும்..

இதே ஈழப்போருக்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய சட்ட நிறைவேற்றிய ஜெயலலிதா அம்மையாரை நல்லவராகவும்‌. அதே அன்று ஈழவனுக்காக போராடிய கருணாநிதியை துரோகி என பட்டம் கொடுத்தது யார்?????

கேள்விக்கனைகளுடன்

மணியன் கலியமூர்த்தி

சென்னை.