Thursday , October 17 2019
Breaking News
Home / செய்திகள் / இளைஞரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கும்பல்!!
அரக்கோணம்

இளைஞரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கும்பல்!!

ஜாதி பெயரை இழிவாக பேசியும், ஆண் உறுப்பை அருத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆணைபலையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டப்பளையம்,அம்மன் கோயில் தெரு, அருந்ததி பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயராமன்.

இவருடைய மகன் கிருஷ்ணன் (23) தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். ஜெயராமன் இறப்புக்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்து 1 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஆணப்பாளையம் ரேசன் கடைக்கு சென்று வரும் போது கிராமத்தில் உள்ள ஏரிக்கரை தார் சாலை மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார்.

அந்த வழியாக மிட்டபாலையம் சேர்ந்த திலீப்குமார் வருகையில் சிறுநீர் போய்கொண்டு இருந்த கிருஷ்ணனிடம் சென்று செக்கிலி — பையா நாங்க இருக்குற இடத்தில் சிறுநீர் போவியா என கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

திலிப்குமார், அவரது உறவினர்களான கோதண்டன், பார்த்திபன் ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணணை தாக்குவதற்கு தயாராக இருந்துளது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மறைவாக நின்று கொண்டு கிருஷ்ணனை ஜாதி பெயர் கூறி அடித்து அம்மிக்கல்லால் தலைமீது தாக்கியுள்ளனர்.

இதில் நிலைத்தடுமாறி கிருஷ்ணன் கீழே விழுந்தார். உடனே திலிப், கோதண்டம் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இணைந்து கிருஷ்ணனின் ஆண் உறுப்பை அறுத்து தப்பி சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது தொடர்பாக அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் நடவடிக்கை இல்லாததால் கிருஷ்ணன் உறவினர்கள் மற்றும் அவருடைய வழக்கறிஞர் லட்சுமிபதி மூலம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரை அளித்துள்ளனர்.

அதை தொடர்ந்து இந்த வழக்கை கிராமிய காவல் நிலையத்தில் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை வெறி தாக்குதல் நடத்தி, எங்கள் சமூகத்தை தரக்குறைவாக பேசியவர்கள் மீது
SC/ST சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திலீப் குமார், கோதண்டம் மற்றும் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Check Also

ராதிகா ஆப்தே

‘படுக்கை அறையில் ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா?’…விளாசும் ரஜினி படநாயகி….

‘படுக்கை அறைக்காட்சிகளில் நடிக்க நான் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை. ஆனால் அது குறித்து சர்ச்சை கிளப்புபவர்கள் அதே படுக்கை …