Thursday , October 17 2019
Breaking News
Home / செய்திகள் / ‘படுக்கை அறையில் ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா?’…விளாசும் ரஜினி படநாயகி….
ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

‘படுக்கை அறையில் ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா?’…விளாசும் ரஜினி படநாயகி….

‘படுக்கை அறைக்காட்சிகளில் நடிக்க நான் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை.

ஆனால் அது குறித்து சர்ச்சை கிளப்புபவர்கள் அதே படுக்கை அறையில் உடன் இருக்கும் ஆணை விட்டுவிட்டு பெண்களாகிய எங்களை மட்டுமே ஏன் குறி வைக்கிறீர்கள்’என்று படு சூடாகக் கேள்வி எழுப்புகிறார் ரஜினியின் ‘கபாலி’பட நாயகி ராதிகா ஆப்தே.

தமிழில் ‘கபாலி’, ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்பப் பாங்காக நடித்து வந்த அவர் இப்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.

2016-ல் ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கை அறை காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்து ஒன்றிரண்டு குறும்படங்களில் மிக செக்ஸியான கேரக்டர்களில் நடித்து பரபரப்பைக்கிளப்பினார்.

தற்போது ‘த வெட்டிங் கெஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தேவும், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான தேவ் படேலும் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் படுக்கை அறை காட்சியொன்றில் ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் ஆபாசமாக நடித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராதிகா ஆப்தேவுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.

இது குறித்து பதிலளித்த அவர்,“த வெட்டிங் கெஸ்ட்’ படத்தில் நிறைய நல்ல காட்சிகள் உள்ளன.

அவற்றையெல்லாம் விட்டு விட்டு குறிப்பிட்ட படுக்கை அறை காட்சியை மட்டும் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இது சமூகத்தின் மோசமான மனநிலையையே காட்டுகிறது. படுக்கை அறை காட்சியில் நானும் தேவ்படேலும் இருக்கிறோம்.

ஆனால் தேவ் படேலை விட்டு விட்டு ராதிகா ஆப்தேவின் செக்ஸ் காட்சி என்ற பெயரில் என்னை குறிவைத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

தேவ் படேல் செக்ஸ் காட்சி என்று பகிர வேண்டியதுதானே. எதற்காக நடிகர் பெயரை மட்டும் சவுகரியமாக விட்டு விடுகிறார்கள் என்பது விளங்கவில்லை.”என்று விளாசுகிறார் ராதிகா ஆப்தே.

Check Also

அரக்கோணம்

இளைஞரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கும்பல்!!

ஜாதி பெயரை இழிவாக பேசியும், ஆண் உறுப்பை அருத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …